Reading Time: < 1 minute

ஒன்ராறியோவில் 43பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக, மாகாண அரசு தெரிவித்துள்ளது.

Tamil Business Directory

இதன்மூலம் மாகாணத்தில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 146ஆக அதிகரித்துள்ளது.

இந்த நோயாளிகளில் 5 பேருக்கு தொற்றுநோயாக இல்லை என்று மாகாண அரசு தனது இணையதளத்தில் தெரிவித்துள்ளது.

புதிதாக உறுதிப்படுத்தப்பட்ட வழக்குகளில், 14 நோயாளிகள் ரொறன்ரோவிலும், ஐந்து பேர் பீல் பிராந்தியத்திலும், மூன்று நோயாளிகள் யோர்க் பிராந்தியத்திலும் உள்ளனர்.

இரண்டு பேர் கிரே ப்ரூஸைச் சேர்ந்தவர்கள். மற்றொருவர் பீட்டர்பரோவைச் சேர்ந்தவர். மூன்று பேர் ஹாமில்டனில் உள்ளனர்.

அத்துடன் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை, சட்பரியில் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது வழக்கு உறுதி செய்யப்பட்டது.