Reading Time: < 1 minute

ஒண்டாரியோவில் GO தொடரூந்து சேவைகளின் விரிவாக்கம் தொடர்பிலான அறிவிப்புக்களை மாகாண அரசு வெளியிட்டுள்ளது.

Tamil Business Directory

அதன் அடிப்படையில், 77,000க்கும் அதிகமான மேலதிக இருக்கைகளுடன் கூடிய புதிய சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக, ஒண்டாரியோ போக்குவரத்து அமைச்சர் கரோலின் மல்ரோனி தெரிவித்துள்ளார்.

இம்மாதம் 31ம் திகதிமுதல், வாராந்தம் 84 புதிய GO தொடரூந்து சேவைகள் இயக்கப்படவுள்ளன.

இந்த விரிவாக்கம், வாழ்விடம், வேலை உள்ளடங்களானவற்றை தெரிவு செய்வதில், ஒண்டாரியோ வாசிகளுக்கு மேலதிக சுதந்திரத்தை வழங்குமெனவும், போக்குவரத்து அமைச்சர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.