Reading Time: < 1 minute

ஆண்டின் முதல் ஆறு வாரங்களில் ஒட்டாவா நகரின் சாலைகளில் விபத்துகள் அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது.

Tamil Business Directory

ஜனவரி 1 முதல் பெப்ரவரி 14 வரை 3,153 விபத்துகள் பதிவாகியுள்ளன. 2025 இதே காலகட்டத்தில் 2,964 விபத்துகள் மட்டுமே பதிவாகியிருந்தன.

இதில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்; 88 பேர் காயமடைந்தனர். இந்த காலகட்டத்தில் 17 விபத்துகள் பாதசாரிகள் சம்பந்தப்பட்டது.

3153 மொத்த விபத்துகளில் 457 விபத்துகளின் போது வாகன சாரதிகள் சம்பவ இடத்திலிருந்து தப்பி சென்றுள்ளனர்.

2025 ஆம் ஆண்டில், ஒட்டாவாவில் மொத்த 20,650 விபத்துகள் பதிவாகின, இதில் 3,320 விபத்துகளின் போது வாகன சாரதிகள் சம்பவ இடத்திலிருந்து தப்பி சென்றுள்ளனர்.

பாதசாரிகள் சம்பந்தப்பட்ட விபத்துகள் 268, சைக்கிளோட்டர்களுக்கு சம்பந்தப்பட்ட விபத்துகள் 140 ஆக இருந்தன.

Comments are closed, but trackbacks and pingbacks are open.