Reading Time: < 1 minute

ஒட்டாவாவில் முதியவர் ஒருவர் பாரியளவு நீர்க் கட்டணம் கிடைக்கப் பெற்றதனால் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளார்.

Tamil Business Directory

ஒட்டாவா நகரைச் சேர்ந்த 68 வயதுடைய பால் மலூ என்பவரே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளார்.

தனது வீட்டின’ ஒரு கழிப்பறை கசிவால் 1,547 டொலர் நீர்க்கட்டணத்தை பெற்றதும் அதிர்ச்சியடைந்துள்ளார்.

இது அவருடைய வழக்கமான கட்டணத்தைவிட 15 மடங்கு அதிகம் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

கட்டணத்தை பார்த்ததும் முதலில் சிரிப்பு வந்ததாகவும், வீட்டில் ஒர் நீச்சல் குளம் இருந்திருந்தாலும் இவ்வளவு கட்டணத் தொகை அதிகரித்திருக்காது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, “சட்டப்படி கட்டணத்தை செலுத்த வேண்டும்” என நகரசபை நிர்வாகம் தெரிவித்தள்ளது.

மலூயின், இது பற்றிய விளக்கம் கேட்க ஒட்டாவா நகரசபையை அணுகியபோது, அவரிடம் “இது நகரச் சட்டப்படி கட்டணமாகவே செலுத்தப்படவேண்டும்; கட்டணத் தள்ளுபடி கிடையாது” என்று தெரிவிக்கப்பட்டது.

மேலும், அவர் நகர முதல்வரின் அலுவலகத்துக்கும் புகார் அளித்துள்ளார். ஆனால் இதுவரை பதில் கிடைக்கவில்லை என தெரிவித்துள்ளார்.