Reading Time: < 1 minute

அண்மையில் சமர்ப்பிக்கப்பட்ட கனடா அரசின் பில் சீ Bill C-2 சட்ட மூலத்தை எதிர்த்து, மக்கள் உரிமை மற்றும் குடியுரிமை ஆதரவாளர்கள் ஞாயிற்றுக்கிழமை மோன்ரியல் நகரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Tamil Business Directory

இந்த சட்டமூலம் நாடு முழுவதும் எல்லைப் பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கில் கொண்டுவரப்பட்டதாகும், ஆனால் இது பெரும் அளவில் குடிபெயர்ந்தவர்களின் வாழ்வையும் உரிமைகளையும் பாதிக்கும் என எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

மொத்தம் 80க்கும் மேற்பட்டவர்கள், கனடா குடியேற்றம் மற்றும் அகதிகள் வாரிய அலுவலகம் (Immigration and Refugee Board of Canada) முன்பு ஒன்றுகூடி, “எல்லோருக்கும் நிலையான அந்தஸ்து வேண்டும்” மற்றும் “அகதிகளுடன் ஒற்றுமை” என கூச்சலிட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தை ‘Solidarity Across Borders’ அமைப்பு ஏற்பாடு செய்தது. எல்லைப் பாதுகாப்பு பெயரில் கொண்டு வரப்படும் இந்த மசோதா, சமூகங்களைப் பாதுகாப்பதில்லை.

இதனால் எல்லைகளை பாதுகாப்பாக கடக்கவும் சிரமமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாம் அனைவரும் மனிதர்கள்தான். சமத்துவம், பாதுகாப்பு மற்றும் செல்லும் சுதந்திரம் எங்களுக்கு உரிமையாகவே இருக்க வேண்டும்,” என போராட்டக்காரர்கள் வலியுறுத்தியுள்ளனர்.