Reading Time: < 1 minute

கனடாவின் எட்மன்டன் நகரத்தின் தெற்குப் பகுதியிலுள்ள சார்ள்ஸ்பே Charles Bay மற்றும் சர்ள்ஸ்வே Charles Way பகுதியில் உள்ள வீடொன்றில் ஒரு பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

Tamil Business Directory

சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்துள்ள சம்பவம் தொடர்பாக பொலிஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

திங்கள் காலை 8:30 மணிக்கு, குறித்த வீட்டில் ஒரு பெண் காயமடைந்துள்ளதாக அவசர சேவைகளை தொடர்பு கொண்டதும், உடனடியாக அதிகாரிகள் மற்றும் மருத்துவக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

மருத்துவ குழுவினர் அவசர உயிர்காக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டபோதும், அந்த பெண் வீடிலேயே உயிரிழந்தார் என உறுதி செய்யப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பாக ஏதேனும் தகவல்கள் உள்ளவர்கள், எட்மன்டன் நகர போலீசாரை 780-423-4567 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு அறிவிக்க முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.