Reading Time: < 1 minute

எட்மண்டனுக்கு மேற்கே உள்ள புத்தம் புதிய வீடு தீக்கிரையான சம்பவம் குறித்து, அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tamil Business Directory

நேற்று (திங்கட்கிழமை) இரவு 8.30 மணியளவில் ஸ்டோனி சமவெளிக்கு வடக்கே ரேஞ்ச் வீதி 580 மற்றும் டவுன்ஷிப் வீதி 540இற்க்கு அருகில் கிராமப்புற துணைப்பிரிவில் தீ விபத்து ஏற்பட்டது.

எனினும், இந்த தீவிபத்தின் போது எவ்வித உயிரிழப்போ அல்லது யாருக்கும் காயங்களோ இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புத்தம் புதிய வீட்டின் கட்டுமானம் நிறைவடைய இன்னும் சில வாரங்களே இருந்த நிலையிலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

தீ விபத்துக்கான காரணம் மற்றும் சேத மதிப்பீடு விசாரணையில் உள்ளதாக பார்க்லேண்ட் மாவட்ட தீயணைப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.