Reading Time: < 1 minute

எதிர்வரும் சுற்றுலாப் பருவத்தில் இலங்கைக்கு வருகை தருமாறு உலகெங்கிலும் உள்ள சுற்றுலாப் பயணிகளுக்கு அழைப்பு விடுப்பதாக இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு பணியகம் அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது.

Tamil Business Directory

இலங்கையின் அழகை உற்றுப்பார்க்கும் அனைத்து சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பும் உறுதி செய்யப்படுவதாகவும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கையில் தங்கியுள்ள அனைத்து சுற்றுலாப் பயணிகளுக்கும் உயர் மட்ட பாதுகாப்பு பேணப்படும் என்றும் அந்த அறிவிப்பில் உறுதியளிக்கப்பட்டுள்ளது.

தற்போது இலங்கையில் தங்கியுள்ள அனைத்து வெளிநாட்டினரின் பாதுகாப்பை உறுதிப்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு இலங்கை சுற்றுலாத்துறைக்கு உறுதியளித்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.