Reading Time: < 1 minute

ரஷ்யப் போருக்குச் சென்ற ஓய்வுபெற்ற இலங்கை இராணுவத்தினர் 05 பேர் உக்ரைன் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Tamil Business Directory

இது தொடர்பில் உக்ரைன் அரசாங்கம் உத்தியோகபூர்வ அறிவித்தலை துருக்கியிலுள்ள இலங்கை தூதரகத்திற்கு வழங்கியுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

ரஷ்ய எல்லை வழியாக உக்ரைனுக்குள் நுழைந்த போது உக்ரைன் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதேவேளை உக்ரைன் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்ட 5 இலங்கையர்களை விடுவிக்க தேவையான தலையீடுகள் மேற்கொள்ளப்படும் என்றும் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.