Reading Time: < 1 minute

உக்ரைனுக்கு மேலும் 235 மில்லியன் டொலர் உதவிகள் வழங்கப்படுவதாக கனடா அறிவித்துள்ளது.

Tamil Business Directory

தேசிய பாதுகாப்பு அமைச்சர் டேவிட் மெக்கின்டி மற்றும் வெளிவிவகார அமைச்சர் அனிதா ஆனந்த் ஆகியோர் இந்த உதவி குறித்து அறிவித்துள்ளனர்.

கனடா, அமெரிக்காவில் இருந்து பெறப்படும் 500 மில்லியன் டொலர் மதிப்பிலான முக்கிய ராணுவ உபகரணங்களை கொள்வனவு செய்வதில் நேடோ கூட்டாளிகளுடன் இணைந்து செயல்படும் எனவும் இதில் கனடாவின் பங்கு 200 மில்லியன் டொலர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பெல்ஜியத்தின் பிரஸெல்ஸில் நடைபெற்ற நேடோ வெளிநாட்டு அமைச்சர்கள் கூட்டத்தில் அனிதா ஆனந்த் இந்த உதவி குறித்து அறிவித்துள்ளார்.

கனடா அரசு, உக்ரைனின் பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மைக்கு தொடர்ந்த ஆதரவை வழங்கும் எனவும், இத்தகைய உதவி, ரஷ்யா தாக்குதலுக்கு எதிராக நாட்டின் பாதுகாப்புத் திறனை வலுப்படுத்தும் எனவும் தெரிவித்துள்ளது.