ஈரானில் நடைபெற்று வரும் மோதலின் தாக்கங்களை கனடா தொடர்ந்து கவனித்து வரும் நிலையில், கனடாவிற்கு அல்லது கனடியர்களுக்கு உடனடி பாதுகாப்பு அச்சுறுத்தல் எதுவும் இல்லை என கனடிய பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஆனால், உலக அரசியல் பதற்றங்கள் சில நேரங்களில் தீவிரவாத வலையமைப்புகள் அல்லது வெறுப்பு சார்ந்த குழுக்களை தூண்டக்கூடும் என்பதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் அந்த அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
தற்போது குறிப்பிட்ட அச்சுறுத்தல் எதுவும் இல்லை. எனினும் விழிப்புணர்வும் ஆரம்ப கட்ட தகவல் பகிர்வும் பாதுகாப்பிற்கான முக்கிய அம்சங்களாகும்” என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சனிக்கிழமை அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து மேற்கொண்ட தாக்குதலில், ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கொமெய்னி உயிரிழந்துள்ளார்.
இந்த நிலையில், ஈரானுக்கு ஆதரவான குழுக்கள் வெளிநாடுகளில் பழிவாங்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளக்கூடும் என பாதுகாப்பு நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
டொரோண்டோ நகரின் வடபகுதியான Thornhill பகுதியில், ஈரான் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை ஒருங்கிணைத்து வந்த ஈரான்-கனடிய செயற்பாட்டாளர் சலார் கோலாமியின் குத்துச்சண்டை பயிற்சி மையம் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவம் பதற்றத்தை அதிகரித்துள்ளது.
இந்த மையம் அண்மைய வாரங்களில் ஈரான் ஒற்றுமை பேரணிகளை ஏற்பாடு செய்ய பயன்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் போலீசார் இந்த சம்பவத்தை விசாரித்து வருகின்றனர். தாக்குதலின் நோக்கம் இன்னும் உறுதி செய்யப்படவில்லை.





Comments are closed, but trackbacks and pingbacks are open.