Reading Time: < 1 minute

பிரதமர் ஈரானின் நடவடிக்கைகளை கனடா பிரதமர் மார்க் கார்னி கண்டித்துள்ளது.

Tamil Business Directory

மத்திய கிழக்கின் நிலவும் பதற்ற நிலையின் எதிரொலியாக, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

அணுசக்தித் திட்டம்
“ஈரானின் அணுசக்தித் திட்டம் நீண்ட காலமாகவே பெரும் கவலையை ஏற்படுத்திய ஒன்று. இப்போது, இஸ்ரேல் முழுவதும் ஈரான் மேற்கொண்ட ஏவுகணை தாக்குதல், பிராந்திய அமைதிக்கே நேரடி அச்சுறுத்தலாக உள்ளது” எனக் கூறியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, பிராந்தியத்தில் உருவாகும் சூழ்நிலையை மதிப்பீடு செய்ய கனடாவின் தேசிய பாதுகாப்பு பேரவை அவசரமாக கூட ள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

“இஸ்ரேலுக்கு தன்னை பாதுகாக்கும் உரிமை உள்ளது என்பதை கனடா மீண்டும் உறுதிப்படுத்துகிறது என குறிப்பிட்டுள்ளார்.

அனைத்து தரப்புகளும் மிகுந்த ஒழுங்கும், பொறுப்பும் காட்ட வேண்டும். ராஜதந்திர ரீதியான தீர்வுக்காக முன்னேற வேண்டும்,” என அவர் X தளத்தில் பதிவிட்டுள்ளார்.