Reading Time: < 1 minute

IMF இன் 2 ஆவது மீளாய்வு முடிவடைவதற்குள், வர்த்தகக் கடன் வழங்குநர்களுடன் இலங்கை ஒரு உடன்பாட்டை எட்ட முடியும் என்பதில் ‘மிகுந்த எதிர்ப்பார்ப்பு உள்ளதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.

Tamil Business Directory

இலங்கை தற்போது 12 பில்லியன் டொலர்கள் கடன் மறுசீரமைப்புக்காக பத்திரப்பதிவுதாரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றது.

இந்நிலையில் பொருளாதார நெருக்கடியில் இருந்து இலங்கை மீள்வதற்கு அவசியமான நடவடிக்கையாக இது கருதப்படுவதாக, சர்வதேச நாணய நிதியத்தின் பேச்சாளர் ஜூலி கோசாக் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு மார்ச் மாதம், சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு 2.9 பில்லியன் டொலர் விரிவான கடன் வசதிக்கு ஒப்புதல் அளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.