Reading Time: < 1 minute

”இந்த மாதத்தின் முதல் 18 நாட்களில் மாத்திரம் 138,736 சுற்றுலாப்பயணிகள் நாட்டுக்கு வருகைத்தந்துள்ளனர்” என சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

Tamil Business Directory

அத்துடன் ரஷ்யாவில் இருந்தே அதிகளவான சுற்றுலாப்பயணிகள் நாட்டுக்கு வருகைத்தந்துள்ளனர் எனவும்,
அந்நாட்டில் இருந்து 20 ஆயிரத்து 101 பேரும், இந்தியாவில் இருந்து 18 ஆயிரத்து 564 பேரும், சீனாவில் இருந்து 10 ஆயிரத்து 696 பேரும் நாட்டுக்கு வருகைத்தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

மேலும் கடந்த ஜனவரி மாதத்தில் 2 இலட்சத்து 82 ஆயிரத்து 53 சுற்றுலாப்பயணிகள் நாட்டுக்கு வருகைத்தந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.