Reading Time: < 1 minute

கடனை நிலைநிறுத்துவதற்கான இலங்கையின் முயற்சிகளுக்கு சர்வதேச நாணய நிதியம் முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதாக உறுதியளித்துள்ளது.

Tamil Business Directory

சர்வதேச நாணய நிதியத்தின் முதல் பிரதி முகாமைத்துவப் பணிப்பாளர் கீதா கோபிநாத் மற்றும் நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தலைமையிலான இலங்கைக் குழுவிற்கும் சர்வதேச நாணய நிதியம்-உலக வங்கிக் குழுகளுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

மொராக்கோவில் உள்ள மராகேச்சில் இடம்பெற்ற குறித்த சந்திப்பின் போதே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டது.

இதன்போது, சர்வதேச நாணய நிதியத்தின் முதலாவது பிரதி முகாமைத்துவப் பணிப்பாளரும் இலங்கையின் பல்வேறு துறைகளில் அடைந்துள்ள முன்னேற்றத்தைப் பாராட்டியதாக இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

ஊழலுக்கு எதிரான மற்றும் நிர்வாகத்தை மேம்படுத்துவதற்கான தற்போதைய பணிகள் குறித்தும் இரு தரப்பினரும் இதன்போது கலந்துரையாடியுள்ளதாக இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார்.