Reading Time: < 1 minute

கனடாவில் இரண்டு கொலைச் சம்பவங்களுடன் தொடர்புடைய பிரிட்டிஷ் கொலம்பிய மாகாணத்தைச் சேர்ந்த பிரஜை ஒருவருக்கு நீதிமன்றம் அதிரடி தண்டனை விதித்துள்ளது.

Tamil Business Directory

2022ஆம் ஆண்டு இடம்பெற்ற இரு தனித்தனி துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் தொடர்பாகவே இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

39 வயதான ஜஸ்டின் போஸ் (Justin Bos) என்ற நபருக்கு, மொத்தமாக 19 ஆண்டுகள் சிறைத்தண்டனைக விதிக்கப்பட்டுள்ளது.

பிரிட்டிஷ் கொலம்பியாவின். உச்ச நீதிமன்றம் (B.C. Supreme Court) கடந்த வெள்ளிக்கிழமை இந்த தண்டனையை விதித்துள்ளது.

மார்ச் 25, 2022: 30 வயதான கோடி மொஸ்டாட் (Cody Mostat) லாங்க்லியில் உள்ள ஓர் ஹோட்டலில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்தார்.

ஆகஸ்ட் 27, 2022: 37 வயது ட்ராய் ரெக்னியர் (Troy Regnier), சற்ரே நகரில் உள்ள 16600-வது 19வது வீதியில் உள்ள வீடொன்றுக்கு வெளியே, துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயரிழந்தார்.

இந்த இரண்டு கொலைகளுக்கும் முக்கிய சந்தேக நபராக போஸை, போலீசார் கடந்த 2022ம் ஆண்டு செப்டம்பர் 21ம் திகதி கைது செய்தனர்.

அடுத்த நாளே, மொஸ்டாட் கொலைக்கு இரண்டாம் தர முற்பட்ட கொலை (second-degree murder) குற்றம் சாட்டப்பட்டது. ஒரு வருடத்திற்குப் பிறகு, ரெக்னியர் கொலைக்கும் அதே குற்றச்சாட்டும் தாக்கல் செய்யப்பட்டது.