Reading Time: < 1 minute

அல்பர்ட்டாவில் வழங்கப்படும் கோவிஷீல்ட் அஸ்ட்ராஸெனெகா தடுப்பூசியின் தற்போதைய அளவுகள் சில ஐரோப்பிய நாடுகளில் ஒரு தடுப்பூசியுடன் இணைக்கப்பட்டுள்ள பக்கவிளைவு பிரச்சினைகளுடன் இணைக்கப்படவில்லை என மருத்துவர் தீனா ஹின்ஷா தெரிவித்துள்ளார்.

Tamil Business Directory

இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், ‘ஹெல்த் கனடாவால் அஸ்ட்ராஸெனெகாவுக்கு சமமாகக் கருதப்படும் சீரம் இன்ஸ்டிடியூட் ஒஃப் இந்தியா தயாரித்த தடுப்பூசியின் அடையாளப் பெயரான கோவிஷீல்ட்டை நாங்கள் தற்போது பயன்படுத்துகிறோம்.

தடுப்பூசியுடன் தொடர்புடையதாகவோ அல்லது இல்லாமலோ இருக்கும் அரிய நிகழ்வுகளைக் கண்டறிய கனடாவில் ஒரு வலுவான கண்காணிப்பு அமைப்பு உள்ளது. இந்த தடுப்பூசியை அதிகம் பயன்படுத்தும் ஒரு பகுதியில் இவை மிகவும் அரிதான நிகழ்வுகள் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

தடுப்பூசி இந்த நிகழ்வுகளை ஏற்படுத்தியுள்ளது என்பதற்கான அறிகுறிகள் எதுவும் தற்போது இல்லை. இந்த நாடுகள் எடுத்த நடவடிக்கைகள் மிகுந்த எச்சரிக்கையுடன் இல்லை. அல்பர்ட்டாவில் தடுப்பூசியின் ஒவ்வொரு மருந்தளவையும் தொடர்ந்து கவனித்து கண்காணிப்போம்’ என கூறினார்.