Reading Time: < 1 minute

அரசாங்கத்தின் நடவடிக்கை குறித்து கனடிய மக்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.

Tamil Business Directory

அண்மையில் சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டம் தொடர்பில் இவ்வாறு அதிருப்தி வெளியிடப்பட்டுள்ளது.

மில்லியன் கணக்கான வீடுகளை நிர்மானிக்கும் திட்டத்திற்கு வரவேற்பு வெளியிடப்பட்ட போதிலும் ஒட்டுமொத்த வரவு செலவுத்திட்டம் குறித்த அதிருப்தி வெளியிடப்பட்டுள்ளது.

லெட்ஜர்ஸ் நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்ட கருத்துக் கணிப்பு மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது.

21 வீதமான மக்கள் மட்டுமே வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவினை வழங்கியுள்ளனர்.

பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ தலைமையிலான அரசாங்கம் வரவு செலவுத் திட்டத்தில், பல்வேறு திட்டங்களை அறிவித்திருந்தது.

இணைய வழியில் எழுமாறான அடிப்படையில் இந்த கருத்துக் கணிப்பு மேற்கொளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டம் தொடர்பில் அல்பேர்ட்டா மக்கள் கூடுதல் அதிருப்தியை வெளியிட்டுள்ளனர்.