Reading Time: < 1 minute

அமெரிக்காவிலிருந்து கனடாவுக்குள் பிரவேசிக்க முயன்ற ஒரு சரக்கு லாரியில், சுமார் 23.4 மில்லியன் டொலர் மதிப்புடைய கொக்கெயின் மறைத்து கடத்தப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Tamil Business Directory

இந்த சம்பவம் மே 23, 2025 அன்று, வின்சர்-டெட்ராய்ட் எல்லைப் பகுதியில் உள்ள அம்பாசடர் பாலம் வழியாக இடம்பெற்றது.

கனடிய எல்லைப் பாதுகாப்பு முகவர் நிறுவன Canada Border Services Agency (CBSA) அதிகாரிகள் நடத்திய இரண்டாவது ஆய்வின் போது, ஒரு சரக்கு லாரியின் டிரெய்லரில் குப்பை பைகளில் போதைப் பொருள் கடத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு மீட்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்ட கொக்கேய்னின் மொத்த எடை 187.5 கிலோகிராம். இதன் மதிப்பு சுமார் கனடியன் டொலரில் 23.4 மில்லியன் டொலர் என மதிப்பிடப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பாக, ஒன்டாரியோ மாநில ரிச்ச்மண்ட் ஹில்லைச் சேர்ந்த கம்பிஸ் கரந்திஷ் (வயது 55) என்பவர் கைது செய்யப்பட்டார்.

சந்தேக நபர் மற்றும் பறிமுதல் செய்யப்பட்ட போதைமருந்துகள் ராயல் கனேடியன் மவுண்டட் போலீசிடம் (RCMP) ஒப்படைக்கப்பட்டன.

இந்த பறிமுதல் குறித்து CBSA தெற்கு ஒன்டாரியோ பிராந்திய இயக்குநர் மைக்கேல் ப்ரோசியா கருத்து தெரிவிக்கையில், எல்லைப் பாதுகாப்புப் படைத் தனிப்படைகள் போதைப் பொருட்கள் மற்றும் ஆயுதங்களை தடுக்கும் பணியில் இடையறாது செயல்படுவதாக எல்லைப் பாதுகாப்பு முகவர் நிறுவனம் தெரிவித்துள்ளது.