Reading Time: < 1 minute

கனடாவைச் சேர்ந்த பிரஜையொருவர் அடுத்த அடுத்த ஆண்டில் இரண்டு தடவைகள் லொத்தர் சீட்டிலுப்பில் பரிசு வென்றுள்ளார்.

Tamil Business Directory

ஒன்றாரியோவின் மில்டனைச் சேர்ந்த அன்டானியோ பெய்னி என்பவரே இவ்வாறு பரிசு வென்றுள்ளார்.

கடந்த 2021ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஒரு மில்லியன் டொலர் பரிசு வென்றெடுத்திருந்தார். அண்மையில் நடைபெற்ற லொட்டே மெக்ஸ் பரிசு சீட்டிலுப்பில் அவர் மீண்டும் பரிசு வென்றுள்ளார்.

இரண்டாவது தடவையாகவும் பரிசு வென்றெடுத்தமை பெரும் அதிர்ச்சியையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளதாக அன்டானியோ தெரிவித்துள்ளார்.

அடுத்த தலைமுறையினர் மகிழ்ச்சியாக வாழ்வதற்கான அடித்தளத்தை இடுவதற்கு தாம் நடவடிக்கை எடுக்க உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மில்டனின் Convenience Store பகுதியில் இந்த டிக்கட் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது. கடந்த 2009ம் ஆண்டு முதல் இதுவரையில் ஒன்றாரியோவைச் சேர்ந்தவர்கள் லொட்டோ மெக்ஸ் சீட்டிலுப்பில் 7.3 பில்லியன் டொலர்களை பரிசாக வென்றெடுத்துள்ளனர்.

அன்டானியோ கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதமும், இந்த ஆண்டு செப்டம்பர் மாதமும் இரண்டு தடவைகள் ஒரு மில்லியன் பரிசுத் தொகையை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.