Reading Time: < 1 minute

கனடாவில் லொத்தர் சீட்டிலுப்பில் பரிசு வென்ற தம்பதியினர் ஓய்வு பெற்றுக் கொள்வதாக அறிவித்துள்ளனர்.

Tamil Business Directory

லொட்டோ மெக்ஸ் லொத்தர் சீட்டிலுப்பில் குறித்த தம்பதியினர் 55 மில்லியன் டாலர் பணப்பரிசு வென்றுள்ளனர்.

லவுரான் சாஹில் மற்றும் டோல்ட் ஹாவாக் ஆகிய இருவருமே இவ்வாறு பாரிய தொகை பண பரிசை வென்றுள்ளனர்.

கடந்த 25 ஆண்டுகளாக இருவரும் லொத்தர் சீட்லுப்பில் பங்கேற்று வருவதாக தெரிவித்துள்ளனர்.

பணப்பரிசு வென்றெடுக்கப்பட்டதை தொடர்ந்து இருவரும் தங்களது ஓய்வினை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

பாரியத்தொகை பண பரிசு வென்றெடுக்கப்பட்டது அறிந்து கொண்டதும் தாம் அதிர்ச்சி அடைந்ததாகவும், நா வறண்டு போனதாகவும் பேச முடியாத நிலை காணப்பட்டதாகவும் தெரிவிக்கின்றனர்.

மில்டனைச் சேர்ந்த தம்பதியினரே இவ்வாறு பணப்பரிசு வென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.