Reading Time: < 1 minute

கனடாவின் ஸ்காப்ரோவில் இடம் பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 16 வயதான சிறுவன் கொல்லப்பட்டுள்ளார்.

Tamil Business Directory

பிற்பகல் வேளையில் இந்த 16 வயது சிறுவன் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளான்.

இந்த சம்பவம் தொடர்பில் டொரன்டோ போலீசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

பிளைன்டோவர் பிளாசா பகுதியில் வாகன தரிப்பிட பகுதியில் இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பல்வேறு அங்காடிக்கே எதிரில் இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளமை காணொளிகள் மூலம் தெரிய வந்துள்ளது.

துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் படுகாயம் அடைந்த சிறுவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும் சிகிச்சைகள் பலனின்றி குறித்த சிறுவன் உயிர் இழந்துவிட்டதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.

இந்த ஆண்டில் டொரன்டோவில் படுகொலை செய்யப்பட்ட 37 ஆவது நபர் இந்த சிறுவன் என போலீசார் தெரிவிக்கின்றனர்.

துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பில் விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்பட உள்ளதாக போலீச போலீசார் அறிவித்துள்ளனர்.