Reading Time: < 1 minute

ஸ்காப்ரோவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் மாணவன் ஒருவர் காயமடைந்துள்ளார்.

Tamil Business Directory

தரம் 12ல் கற்கும் மாணவர் ஒருவரே இவ்வாறு காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இலக்கு வைக்கப்பட்டு திட்டமிடப்பட்ட அடிப்படையில் தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் இந்த துப்பாக்கிச் சூட்டின் பொது மாணவரின் தலையில் துப்பாக்கிச் சன்னம் உராய்ந்து சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

16 வயதான மாணவரே சம்பவத்தில் சிறு காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தாக்குதலை மேற்கொண்டதாக சந்தேகிக்கப்படும் நபர் தப்பிச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.