Reading Time: < 1 minute

தீப்பற்றும் அபாயம் காணப்படுவதன் காரணமாக, 13,000-க்கும் மேற்பட்ட வோக்ஸ்வாகன் வாகனங்களை மீளழைப்பதாக (Recall) கனடா போக்குவரத்துத் திணைக்களம் அறிவித்துள்ளது.

Tamil Business Directory

குறிப்பிட்ட சில வாகனங்களின் உற்பத்தியின் போது, அவற்றின் கியர்பாக்ஸ் தரைத்தொடர்பு கம்பி (Transmission Ground Wire) சரியாக இணைக்கப்படாமல் இருந்திருக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் மின் கம்பிவடங்கள் அல்லது அதற்கு அருகிலுள்ள பாகங்கள் அதிகளவில் வெப்பமடைந்து, தீ விபத்து ஏற்படுவதற்கு வழிவகுக்கலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

2025 மற்றும் 2026 ஆண்டுகளில் உற்பத்தி செய்யப்பட்ட வோக்ஸ்வாகன் ஜெட்டா மாடல் வாகனங்களே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளன.

இந்த மீளழைப்பு தொடர்பான அறிவிப்பு முதலில் மார்ச் 11 அன்று வெளியிடப்பட்டு, பின்னர் மார்ச் 13 அன்று புதுப்பிக்கப்பட்டது.

அடுத்தகட்ட நடவடிக்கை: பாதிக்கப்பட்ட வாகனங்களின் உரிமையாளர்களுக்கு வோக்ஸ்வாகன் நிறுவனம் தபால் மூலம் அறிவிக்கும். சம்பந்தப்பட்ட வாகன உரிமையாளர்கள் தமது வாகனங்களை அருகிலுள்ள விற்பனை நிலையங்களுக்கு (Dealership) கொண்டு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

அங்கு வாகனங்கள் பரிசோதிக்கப்பட்டு, தேவைப்படின் கியர்பாக்ஸ் தரைத்தொடர்பு கம்பி சரிசெய்யப்படும். கடந்த ஆண்டு மார்ச் மாதத்திலும், இதே நிறுவனத்தைச் சேர்ந்த சுமார் 20,000 வாகனங்கள் தீப்பற்றும் அபாயம் காரணமாக மீளழைக்கப்பட்டன. அப்போது என்ஜின் மூடி (Engine Cover) தளர்வடைந்து உருகுவதால் ஏற்படும் ஆபத்து சுட்டிக்காட்டப்பட்டது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.