Reading Time: < 1 minute

கனடாவில் கோடை வெப்பம் அதிகரித்து வரும் நிலையில், குழந்தைகள் மற்றும் செல்லப்பிராணிகளை நிறுத்தப்பட்ட காருக்குள் ஒருபோதும் தனியாக விடக்கூடாது என சுகாதார மற்றும் பாதுகாப்பு நிபுணர்கள் மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Tamil Business Directory

Toronto’s Hospital for Sick Children மற்றும் University of Toronto இணைந்து வெளியிட்ட தகவலின்படி, கனடாவில் 2013ஆம் ஆண்டுக்குப் பிறகு வெயில் காலத்தில் காருக்குள் சிக்கி உயிரிழந்த குழந்தைகள் தொடர்பாக பல சம்பவங்கள் பதிவாகியுள்ளன. சராசரியாக ஆண்டுக்கு ஒரு குழந்தை இவ்வாறான தவிர்க்கக்கூடிய விபத்தில் உயிரிழப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுவாக, இத்தகைய சம்பவங்கள் பெற்றோர் அல்லது பராமரிப்பாளர்கள் திட்டமிட்டு செய்வதல்ல. மன அழுத்தம், தூக்கமின்மை, வழக்கமான பயண முறையில் மாற்றம், கவனச்சிதறல் போன்ற காரணங்களால் பின் இருக்கையில் இருக்கும் குழந்தையை மறந்து விடும் நிலை ஏற்படலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

காரின் உள்ளக வெப்பநிலை மிக வேகமாக ஆபத்தான நிலைக்கு உயரக்கூடும். வெளியே வெப்பம் குறைவாக இருந்தாலும், சூரிய வெப்பத்தால் காரின் உள்ளே ‘greenhouse effect’ ஏற்பட்டு, சில நிமிடங்களிலேயே குழந்தைகள் மற்றும் செல்லப்பிராணிகளுக்கு உயிருக்கு ஆபத்தான சூழல் உருவாகலாம்.

Transport Canada-வின் தகவலின்படி, 20°C வெப்பநிலை உள்ள நாளில்கூட, முன்பு air-condition செய்யப்பட்டிருந்த காரின் உள்ளே வெப்பநிலை 20 நிமிடங்களுக்குள் 50°C-ஐ தாண்டக்கூடும். மேலும், குழந்தைகளின் உடல் வெப்பநிலை பெரியவர்களை விட 3 முதல் 5 மடங்கு வேகமாக அதிகரிக்கும் என்பதால், அவர்கள் heatstroke ஆபத்தில் மிக விரைவாக சிக்கக்கூடும்.

ஜன்னலை சிறிது திறந்துவைத்தாலும், கார் நிழலில் நிறுத்தப்பட்டிருந்தாலும், அல்லது “சில நிமிடங்கள் மட்டும்” என்றாலும், குழந்தையை காரில் தனியாக விடுவது பாதுகாப்பானதல்ல என அதிகாரிகள் வலியுறுத்துகின்றனர். காரில் இருந்து இறங்கும்போது பின் இருக்கையை சரிபார்ப்பதை தினசரி பழக்கமாக்கிக்கொள்ள வேண்டும்.

இதற்காக, பணப்பை, கைப்பேசி, அலுவலகப் பை போன்ற முக்கிய பொருட்களை பின் இருக்கையில் வைப்பது ஒரு நினைவூட்டலாக இருக்கும். குழந்தை daycare அல்லது பள்ளிக்கு சென்றுவிட்டாரா என்பதை உறுதி செய்ய குடும்பத்தினர் ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ளும் பழக்கமும் உதவியாக இருக்கும்.

மேலும், குழந்தைகள் தாங்களாகவே நிறுத்தப்பட்ட காருக்குள் ஏறி பூட்டிக்கொள்ளும் அபாயத்தையும் தவிர்க்க, வாகனங்களை எப்போதும் பூட்டிவைத்திருக்க வேண்டும்.

இதே எச்சரிக்கை செல்லப்பிராணிகளுக்கும் பொருந்தும். Ontario SPCA மற்றும் Toronto Humane Society ஆகியவை, வெயில் காலத்தில் செல்லப்பிராணிகளை காருக்குள் தனியாக விடுவது கடுமையான heatstroke, dehydration, மூளை சேதம் அல்லது மரணம் போன்ற ஆபத்துகளை ஏற்படுத்தலாம் என அறிவுறுத்துகின்றன.

ஒரு குழந்தை அல்லது செல்லப்பிராணி காருக்குள் ஆபத்தான நிலையில் இருப்பதை பார்த்தால், உடனடியாக 911 அல்லது உள்ளூர் அதிகாரிகளை தொடர்புகொள்ள வேண்டும்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.