Reading Time: < 1 minute

அஸர்பய்ஜான் விமான விபத்து குறித்து வெளிப்படை தன்மையுடன் கூடிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என கனடிய அரசாங்கம் ரஷ்யாவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

Tamil Business Directory

ரஷ்யாவின் வான் பாதுகாப்பு கட்டமைப்பின் ஊடாக தாக்குதல் நடத்தி இருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

அஸர்பய்ஜான் விமானத்தின் மீது ரஷ்ய வான் படையினர் தாக்குதல் நடத்தி இருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.

எனவே இந்த சம்பவம் தொடர்பில் பக்கச் சார்பற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் என கனடிய வெளிவிவகார அமைச்சு கோரியுள்ளது.

அஸர்பய்ஜான் விமான சேவை நிறுவனத்திற:கு சொந்தமான விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் 38 பேர் கொல்லப்பட்டிருந்தனர்.

இந்த விபத்து கசகஸ்தானில் இடம் பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.