Reading Time: < 1 minute

கனடாவில் வாகன கொள்ளை சம்பவங்களை தடுப்பதற்கு விசேட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Tamil Business Directory

குறிப்பாக ரொறன்ரோ பெரும் பாகப்பகுதியில் இடம்பெறக்கூடிய வாகன கொள்ளை சம்பவங்களை தடுத்து நிறுத்துவதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

யோர்க் பிராந்திய போலீசார் இது தொடர்பான நடவடிக்கைகளை எடுத்துள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.

வாகனங்கள் களவாடப்பட்டு மறைத்து வைக்கப்படும் இடங்கள் தொடர்பில் புலனாய்வு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அநேகமான வாகனங்கள் களவாடப்பட்டு பின்னர் அவை இரகசியமான முறையில் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

கனடாவில் அதிக எண்ணிக்கையிலான வாகனங்கள் களவாடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.