Reading Time: < 1 minute
Tamil Business Directory
வன்கூவர் தீவின் மேற்கு கடற்கரையில் மிதமான நிலநடுக்கமொன்று ஏற்பட்டுள்ளது. இது மெட்ரோ வன்கூவர் முழுவதும் உள்ள மக்களால் உணரப்பட்டதாக கூறப்படுகிறது.
நேற்று (வெள்ளிக்கிழமை) மதியம் 1:35 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 4.5 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது.
எனினும், சேதம் எதுவும் ஏற்பட்டதாக எந்த அறிக்கையும் இல்லை, அத்தோடு இந்த அதிர்வலையில் இருந்து சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வன்கூவர் தீவில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.
அதிக நில அதிர்வுத்தன்மை கொண்ட இந்த பிராந்தியத்தில் நிலநடுக்கங்கள் இருப்பது முற்றிலும் இயல்பானது என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.




