Reading Time: < 1 minute

கனடாவின் ரொறன்ரோ பகுதியில் கார் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட 19 வயதான நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

Tamil Business Directory

குறித்த நபர் வீடு ஒன்றை உடைத்து உள்ளே பிரவேசித்து காரின் சாவியை களவாடி காரை எடுத்துச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கென்னடி வீதி மற்றும் பிரிட்ஜ் மவுண்ட் வீதிக்கு அருகாமையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வீட்டின் முன்பக்க ஜன்னலை உடைத்து வீட்டுக்குள் புகுந்து காரின் சாவியை எடுத்து உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

19 வயதான ஜொனத்தன் பாரத் என்ற நபரே இவ்வாறு குற்றம் சுமத்தப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் களவாடப்பட்ட வாகனங்கள் மீற பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.