Reading Time: < 1 minute

கனடாவின் ரொறன்ரோ பெரும்பாக பகுதியில் வீட்டு விற்பனை பாரிய அளவில் வீழ்ச்சி அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Tamil Business Directory

அண்மையில் வெளியிடப்பட்ட புதிய அறிக்கை ஒன்றில் இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

வீட்டு விற்பனையில் ஏற்பட்டுள்ள பாரிய வீழ்ச்சியை கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது.

கனடிய வீட்டு நிர்மான ஒன்றியம் இது தொடர்பான தகவலை வெளியிட்டுள்ளது.

கடந்த ஜூலை மாதத்திற்கான வீட்டு விற்பனை முன்னொருபோதும் இல்லாத அளவிற்கு வீழ்ச்சி அடைந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கடந்த ஜூலை மாதம் 654 புதிய வீடுகள் விற்பனை செய்யப்பட்டதாகவும் இது கடந்த 2023 ஆம் ஆண்டு ஜூலை மாதத்துடன் ஒப்பீடு செய்யும் போது 48 வீத வீழ்ச்சி எனவும், பத்தாண்டு கால சராசரியுடன் ஒப்பிடும் செய்யும்போது 70 வீத வீழ்ச்சி எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எதிர்வரும் மாதங்களில் வட்டி வீதங்கள் குறைவடையும் என்ற எதிர்பார்ப்பு காரணமாக வீட்டு விற்பனை குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதிகளவு வீடு நிரம்பல் செய்யப்பட்டிருப்பதாகவும் வீட்டு விற்பனையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.