Reading Time: < 1 minute
Tamil Business Directory
ரொன்ரோவின் மிட் டவுன் பகுதியில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
இந்த தாக்குதல் சம்பவத்தில் காயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டின் பேரில் மூன்று சந்தேக நபர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மிட் டவுன் பகுதியில் இடம்பெற்ற கொள்ளை சம்பவம் ஒன்று தொடர்பிலான விசாரணைகளில் ஈடுபட்டிருந்த நேரம் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
யோங் மற்றும் எக்ங்லின்டன் வீதிகளுக்கு அருகாமையில் இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.
29 வயதான போலீஸ் உத்தியோக உத்தியோகத்தர் ஒருவரே சம்பவத்தில் காயமடைந்துள்ளார்.




