Reading Time: < 1 minute

கனடாவின் யோர்க் பிராந்தியத்தில் கார் ஒன்று களவாடிச் சென்ற நபரை பொலிஸார் தேடி வருகின்றனர்.

Tamil Business Directory

இந்த சந்தேக நபர் தொடர்பான காணொளிகள் வெளியிடப்பட்டுள்ளது. காரை திருடிய நபர் வேகமாக தப்பி சென்றதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.

ரிச்மண்ட் ஹில் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. வேகமாக காரை செலுத்திய நபரை இடை மறிநத்த போலிஸார், இருக்கைப்பட்டி அணியுமாறு அறிவுறுத்தியுள்ளனர்.

இருக்கை பட்டியை அணிந்த நபர், வாகனத்தை நிறுத்தாது வேகமாக தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

20 முதல் 30 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவரை இவ்வாறு வாகனத்தை களவாடி சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ATPY666 என்ற இலக்க வாகனமே இவ்வாறு களவாடப்பட்டுள்ளது.

இந்த வாகனத்தை கொள்ளையிட்ட நபர் தொடர்பிலான விபரங்கள் தெரிந்தால் அறிவிக்குமாறு பொலிஸார் கோரியுள்ளனர்.