Reading Time: < 1 minute

ரொறன்ரோவில் இரு வேறு இடங்களில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவங்களில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் மற்றுமொருவர் காயமடைந்துள்ளார்.

Tamil Business Directory

நோர்த் யோர்க் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன், ஸ்காப்ரோ துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

யோங் ஷெப்பர்ட் ரயில் நிலையத்திற்கு அருகாமையில் முதல் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதில் நபர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் காணப்பட்டதாகவும் பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்த போது அவர் உயிரிழந்து விட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

எங்லின்டன் எவன்யூ மற்றும் பிரைம்லீ வீதி என்பனவற்றுக்கு அருகாமையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் மற்றுமொருவர் காயமடைந்துள்ளார்.

இந்த இரண்டு துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் தொடர்பிலும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அண்மைக்காலமாக ரொறன்ரோ பெரும்பாக பகுதிகளில் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் அதிகளவில் பதிவாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.