Reading Time: < 1 minute
Tamil Business Directory
கனடாவின் ரொறன்ரோவில் அடுக்குமாடி குடியிருப்புக்களின் வாடகைத் தொகை சொற்ப அளவில் குறைவடைந்துள்ளது.
கடந்த ஆண்டுடன் ஒப்பீடு செய்யும் போது இந்த ஆண்டில் ரொறன்ரோவில் அடுக்குமாடி குடியிருப்புக்களின் வாடகை வீழ்ச்சியடைந்துள்ளது.
கடந்த 2022ம் ஆண்டு ஒக்ரோபர் மாதத்துடன் ஒப்பீடு செய்யும் போது இந்த ஆண்டில் ரொறன்ரோ அடுக்கு மாடி குடியிருப்புக்களின் வாடகைத் தொகை 0.8 வீதத்தினால் குறைவடைந்துள்ளது.
கடந்த 2021ம் ஆண்டின் பின்னர் முதல் தடவiயாக ரொறன்ரோவில் வருடாந்த அடிப்படையில் வாடகைத் தொகை வீழ்ச்சியடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
எனினும் கனடாவில் அடுக்குமாடி வீடுகளின் வாடகைத் தொகை அதிகமான நகரங்களில் ரொறன்ரோ இரண்டாம் இடத்தை வகிப்பதாக புள்ளிவிபரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.




