Reading Time: < 1 minute
Tamil Business Directory
ரஸ்ய உளவாளி என்ற குற்றச்சாட்டின் பேரில் கனடாவின் கல்கரி பல்கலைக்கழக பட்டதாரி ஒருவர் நோர்வேயில் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஜோஸ் அஸிஸ் கியாமாரியா என்ற நபரே இவ்வாற கைது செய்யப்பட்டுள்ளார். நோர்வே உள்நாட்டு பாதுகாப்புப் பிரிவினர் குறித்த நபரை கைது செய்துள்ளனர்.
இந்த நபர் கடந்த 2018ம் ஆண்டில் கனடாவின் அல்பர்ட்டா பல்கலைக்கழகத்தில் மூலோபாய கற்கைகளில் முதுமானி பட்டம் பெற்றுக்கொண்டுள்ளார்.
நோர்வே தொடர்பான தகவல்களை இந்த நபர் களவாடியிருக்கலாம் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
குறித்த கனேடிய பட்டதாரி, கடந்த 2015ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பிரச்சாரங்களில் ஈடுபட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சம்பவம் தொடர்பில் கனடாவின் அரசாங்கம் அதிகாரபூர்வமாக இதுவரையில் எவ்வித தகவல்களையும் வெளியிடவில்லை.




