Reading Time: < 1 minute

கனடாவின் முன்னாள் பிரதமர் பிறயன் முல்ரொனியின் மறைவிற்கு பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ இரங்கல் தெரிவித்துள்ளார்.

Tamil Business Directory

முல்ரொனியின் மறைவுச் செய்தி பெரும் கவலையை ஏற்படுத்தியதாக பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டை பெருமைப்படுத்துவதற்காக தொடர்ச்சியாக உதவியதாகத் தெரிவித்துள்ளார்.

தனிப்பட்ட ரீதியில் தமக்கு வழங்கிய அறிவுரைகள் மிகவும் பயனுள்ளவை என ட்ரூடோ தெரிவித்துள்ளார்.

முல்ரொனி மிகவும் கருணையுள்ளம் கொண்டவர் எனவும் நாட்டின் நலனுக்காக அயராது உழைத்தவர் எனவும் தெரிவித்துள்ளார்.

1984ம் ஆண்டு முதல் 1993ம் ஆண்டு வரையில் கனடாவின் 18ம் பிரதமராக முல்ரொனி; வகித்தார்.