Reading Time: < 1 minute

கனடாவில் மிசிசாகா நகரில் உள்ள இரிண்டேல் பூங்கா (Erindale Park) பகுதியில் நீரில் விழுந்த சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

Tamil Business Directory

இந்த சம்பவம் குறித்து பீல் பிராந்திய காவல்துறை கவலைக்குரிய தகவலை வெளியிட்டுள்ளது.

தி கொலேஜ்வேய் The Collegeway சாலையிலுள்ள நீர்நிலையைச் சுற்றிய பகுதியில் ஒரு சிறுவன் காணவில்லை என பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதனைத் தொடர்ந்து பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.

முதற்கட்டமாக மீட்புக் குழு சிறுவனை நீரில் இருந்து மீட்டுக் கொண்டனர். சிறுவன் உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

எனினும், மீட்புக்கான முயற்சிகளும் சிகிச்சையும் பலனளிக்கவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த சிறுவனின் வயது தற்போது வெளியாகவில்லை. பொதுமக்கள், குழந்தைகள் பாதுகாப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியதைக் காவல்துறை இந்த சம்பவத்தின் மூலம் மீண்டும் நினைவூட்டுகிறது.