Reading Time: < 1 minute

போலியான கனேடிய வீசாவைப் பயன்படுத்தி துபாய் ஊடாக கனடாவுக்குச் செல்வதற்கு முயற்சித்த நபர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

Tamil Business Directory

இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் குழுவினால் நேற்றைய தினம் (24.08.2023) கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் பிலியந்தலை பிரதேசத்தில் வசிக்கும் 32 வயதுடையவர் எனத் தகவலறியப்பட்டுள்ளது.

இவர் பல தடவைகள் வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளமையும் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

இவரது கனேடிய விசா தொடர்பில் சந்தேகமடைந்த விமான அதிகாரிகள், அவர் சமர்ப்பித்த அனைத்து ஆவணங்களையும் குடிவரவு மற்றும் எல்லை பாதுகாப்பு பிரிவு அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர்.

அங்கு நடத்தப்பட்ட தொழிநுட்ப பரிசோதனையில், இந்த விசா மோசடியாக தயாரிக்கப்பட்டது என்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, குடிவரவு அதிகாரிகளால் சந்தேகத்தின் பேரில் குறித்த நபர் கைது செய்யப்பட்டார்.