Reading Time: < 1 minute
Tamil Business Directory
பிரிட்டிஷ் கொலம்பியா ஒன்றுகூடுதல் வரம்புகள் இப்போது வெளிப்புற வருகைகளுக்கு மட்டுமே குறைக்கப்பட்டுள்ளதாக மருத்துவர் போனி ஹென்றி தெரிவித்துள்ளார்.
பிரிட்டிஷ் கொலம்பியர்கள் இப்போது 10 பேர் கொண்ட குழுக்களாக ஒரு வெளிப்புற அமைப்பில் உடனடியாக செயற்பட முடியும் என அவர் கூறினார்.
இவர்கள் அதே 10 ஆட்களாக இருக்க வேண்டும். எனவே, நீங்கள் அதை சீராக வைத்திருக்க வேண்டும் என்று மருத்துவர் ஹென்றி குறிப்பிட்டார்.
உட்புற ஒன்றுகூடுதல் விதிகளுக்கு எந்த புதுப்பிப்பும் இல்லை என்று அவர் கூறினார். எனவே, உங்கள் வீட்டுக்கு வெளியே யாருடனும் நீங்கள் உள்ளே செல்ல முடியாது.
வேறு எந்த கட்டுப்பாடுகளும் தளர்த்தப்படுவதில்லை என்றும், பொது சுகாதார நெறிமுறைகளை நாம் தொடர்ந்து பின்பற்ற வேண்டும் என்றும் மருத்துவர் ஹென்றி குறிப்பிட்டுள்ளார்.




