Reading Time: < 1 minute

பிரிட்டிஷ் கொலம்பியாவின் விக்டோரியா பகுதியில் அமைந்துள்ள வாகன நிறுத்துமிடத்தில் பிறந்த குழந்தையின் சடலம் கண்டெடுக்கப்பட்ட நிலையில் பொலிசார் விசாரணை முன்னெடுத்துள்ளனர்.

Tamil Business Directory

விக்டோரியா நகரின் பே தெருவின் 700-பிளாக் பகுதியிலேயே உள்ளூர் நேரப்படி இரவு 10 மணியளவில் பிறந்த குழந்தையின் சடலத்தை கண்டெடுத்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் விக்டோரியா பொலிசார் கூறுகையில், குழந்தை சமீபத்தில் பிறந்துள்ளது, ஒருவேளை அந்த பகுதியிலேயே நடந்திருக்கலாம் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், இந்த சூழலில் குழந்தையின் தாயாருக்கு மருத்துவ உதவி மற்றும் பேறுகால கவனிப்பு தேவைப்படலாம் எனவும் பொலிஸ் தரப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

சம்பவம் நடந்த பகுதியானது Subway உணவகத்தின் அருகாமையில் எனவும் கூறப்படுகிறது. விசாரணை அதிகாரிகள் அப்பகுதி முழுவதும் தீவிர சோதனைக்கு உட்படுத்தியுள்ளதுடன், அந்த உணவகத்தில் உள்ளேயும் வெளியேயும், கழிவறை உட்பட்ட பகுதியிலும் புகைப்படங்களையும் பதிவு செய்துள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பில் தகவல் தெரியவரும் அப்பகுதி மக்கள் விசாரணை அதிகாரிகளை தொடர்புகொள்ளவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.