Reading Time: < 1 minute

கனடாவில் பிரம்டன் பகுதியில் நபர் ஒருவர் சந்தேகத்திற்கு இடமான வகையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

Tamil Business Directory

இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இந்த சடலம் சந்தேகத்திற்கிடமான வகையில் காணப்படுவதாக பீல் பிராந்திய பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

நபர் ஒருவருக்கு அவசர மருத்துவ உதவி தேவைப்படுவதாக கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.

இதன்போது குறித்த இடத்தில் ஒருவர் சலனமற்று இருந்தாகவும், அவர் சில நிமிடங்களில் உயிரிழந்து விட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த மரணம் தொடர்பில் சந்தேகம் நிலவுவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

உயிரிழந்தவரின் ஆள் அடையாள விபரங்கள் வெளியிடப்படவில்லை. உயிரிழந்தவரின் பிரேத பரிசோதனையின் பின்னரே மேலதிக தகவல்களை வெளியிட முடியும் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.