டொராண்டோ பல்கலைக்கழக பொறியியல் பீடத்தில் இயந்திரப் பொறியியல் பட்டப்படிப்பை முடித்த ஆரபி கிருஷ்ணகுமார், தனது பல்வேறு இன்டர்ன்ஷிப் அனுபவங்களின் மூலம் Tesla Toronto நிறுவனத்தில் வேலை வாய்ப்பைப் பெற்றுள்ளார்.
University of Toronto Engineering வெளியிட்ட செய்தியின்படி, MechE 2T5 + PEY பட்டதாரியான ஆரபி கிருஷ்ணகுமார், தனது கல்விக் காலத்திலேயே ஐந்து முக்கியமான பணிப் பயிற்சி அனுபவங்களைப் பெற்றுள்ளார். Bombardier Aerospace, Lockheed Martin, Canada Post, BWT Alpine Formula One Team மற்றும் Canadian Space Agency ஆகிய இடங்களில் அவர் பணியாற்றியுள்ளார்.
இரண்டாம் ஆண்டுக்குப் பின்னர் Bombardier Aerospace நிறுவனத்தில் 8 மாதங்கள் பணியாற்றிய அவர், தனியார் விமான உற்பத்தி செயல்முறைகள் தொடர்பான பணிகளில் ஈடுபட்டார். பின்னர் Lockheed Martin நிறுவனத்தில் கனடாவின் கடற்படை கப்பல் வடிவமைப்பு தொடர்பான பணிகளில் பங்களித்தார்.
அதற்கு முன்பு Canada Post-இல் process engineering intern ஆக பணியாற்றிய அவர், அஞ்சல் வகைப்படுத்தும் அமைப்புகளின் செயல்திறனை மேம்படுத்தும் பணியிலும் ஈடுபட்டிருந்தார்.
2024 அக்டோபரில், ஆரபி கிருஷ்ணகுமார் இங்கிலாந்தின் Oxford நகரில் உள்ள BWT Alpine Formula One Team-இல் build and test intern ஆக இணைந்தார். அங்கு வடிவமைப்பு மற்றும் தொழில்நுட்பக் குழுக்களுக்கிடையில் இணைப்பாளராக இருந்து, வாகன உற்பத்தி மற்றும் சோதனைப் பணிகளில் பங்காற்றினார்.
Formula One துறையில் பெற்ற இந்த அனுபவம், தனது தொழில் பாதையை தெளிவாக புரிந்து கொள்ள உதவியது என அவர் தெரிவித்துள்ளார். குறிப்பாக, கணினி முன் முழு நேரமும் அமர்ந்து வடிவமைப்பு செய்வதை விட, உற்பத்தி தளத்தில் நேரடியாக பாகங்களுடன் பணியாற்றுவதில் தான் அதிக ஆர்வம் உள்ளதாக அவர் கூறியுள்ளார்.
படிப்பின் இறுதி ஆண்டிலும் அவர் Canadian Space Agency-யில் பகுதி நேர இன்டர்ன்ஷிப் செய்து அனுபவம் பெற்றார். BWT Alpine மற்றும் Canadian Space Agency அனுபவங்களும், முன்பிருந்த தொழில்பயிற்சி அனுபவங்களும் சேர்ந்து Tesla Toronto-வில் process engineer பணியைப் பெற முக்கிய காரணமாக அமைந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
Tesla நிறுவனத்தில் பணியாற்றும் வாய்ப்பைப் பற்றி அவர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். நிலையான ஆற்றல் மாற்றத்திற்காக செயல்படும் நிறுவனத்தில் பணியாற்றுவது உற்சாகமளிப்பதாகவும், தனது பொறியியல் கல்வி மற்றும் அனுபவங்களை உலகிற்கு பயனுள்ளதாக பயன்படுத்த விரும்புவதாகவும் ஆரபி கிருஷ்ணகுமார் தெரிவித்துள்ளார்.





Comments are closed, but trackbacks and pingbacks are open.