Reading Time: < 1 minute

பசுமைக்கட்சி – கனடாவின் புதிய தலைவராக கனடிய சட்டத்தரணி அனெமி போல் (ANNAMIE PAUL) தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

Tamil Business Directory

14 வருடங்கள் தொடர்ச்சியாக தலைவராக இருந்த எலிசபெத் மேக்கு (ELIZABETH MAY) பிறகு வரும் தலைவராக யூத கறுப்பின அனெமி பெயரிடப்பட்டுள்ளார்.

அனெமியின் மூதாதையர் கரீபியனிலிருந்து குடிபெயர்ந்தவர்கள். சட்டத்தரணியான இவர் ஒட்டாவா பல்கலைக்கழகத்திலும், பிறின்ஸ்ரன் பல்கலைக்கழகத்திலும் பட்டம் பெற்றவர்.

ரொறன்ரோவில் பிறந்து வளர்ந்த இவர் கனடாவின் நான்கு முக்கிய கட்சிகளின் ஒன்றின் தலைவராக தெரிவாகியுள்ளார்.

எதிர்வரும் 26ஆம் திகதி நடைபெற இருக்கும் மத்திய ரொறன்ரோவின் இடைத்தேர்தலில் அனெமி போல் போட்டியிட இருக்கிறார்.