Reading Time: < 1 minute
Tamil Business Directory
கனடாவின் மானிட்டோபா பகுதியில் நோயாளிகளை துஸ்பிரயோகம் செய்த மருத்துவருக்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மானிடோபாவில் சில ஆண்டு காலமாகவே இந்த மருத்துவர் நோயாளிகளை துஸ்பிரயோகம் செய்து வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஆர்செல் பிசனொட்டே என்ற அரச மருத்துவரே இவ்வாறு தண்டிக்கப்பட்டுள்ளார்.
நீதவான் செயிட் பொன்ட்டினால் இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2001 ஆம் ஆண்டு முதல் 2017 ஆம் ஆண்டு வரையிலான கால காலப்பகுதியில் வைத்தியசாலை ஒன்றில் கடமையாற்றிய போது நோயாளிகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டு வழக்குத் தொடரப்பட்டிருந்தது.
ஐந்து பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதன் காரணமாக டாக்டர் பிசனொட்டியின் மருத்துவ அனுமதி பத்திரம் ரத்து செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.




