Reading Time: < 1 minute

நேற்று பிற்பகல் நோர்த் யோர்க் பகுதியில் இடம்பெற்ற கத்திக் குத்துத் தாக்குதலில் படுகாயமடைந்த சுமார் 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Tamil Business Directory

Yonge Street மற்றும் Pleasant Avenue பகுதியில், நேற்று பிற்பகல் 2:10 அளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றதனை காவல்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.

சம்பவ இடத்திலிருந்து ஆண் சந்தேக நபர் ஒருவர் கால்நடையாகத் தப்பியோடிச் சென்றதாகவும், எனினும் பின்னர் அவர் கைது செய்யப்பட்டு விட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கத்திக் குத்துக்கு இலக்கான பெண் வழங்கிய அடையாங்களின் அடிப்படையில் குறித்த அந்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாகவும், கைது செய்யப்பட்ட வேளையில் அவரது உடலில் இரத்தக் கறை காணப்பட்டதாகவும் காவல்துறையினர் தகவல் வெளியிட்டுள்ளனர்.

எனினும் தாக்குதலுக்கு உள்ளான பெண்ணும் தாக்குதலாளியும் ஏற்கனவே ஒருவரை ஒருவர் அறிந்தவர்களாக என்பது தெரியவில்லை என்று விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குற்றச்சாட்டுகள் உடனடியாக பதிவு செய்யப்படாத நிலையில் விசாரணைகள் தொடர்கின்றன.