Reading Time: < 1 minute

கனடாவின் வோகனில் உள்ள ஒரு வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த ஆயுதமேந்திய கொள்ளையனை, அந்த வீட்டு உரிமையாளர் துப்பாக்கியால் சுட்டு விரட்டியடித்துள்ளார்.

Tamil Business Directory

இந்தச் செயலைப் பாராட்டிய ஒண்டாரியோ மாகாண முதல்வர் டக் ஃபோர்டு, “அந்தக் கொள்ளையனை இன்னும் இரண்டு முறை கூடுதலாகச் சுட்டிருக்க வேண்டும்” என்று அதிரடியாகக் கருத்து தெரிவித்துள்ளார்.

கடந்த செவ்வாய்க்கிழமை அதிகாலை 12:50 மணியளவில், வோகனில் உள்ள ஒரு வீட்டிற்குள் மூன்று பேர் கொண்ட கும்பல் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே நுழைந்ததுள்ளது.

அங்கிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளின்படி, கொள்ளையர்களில் ஒரு நபர் கையில் துப்பாக்கி வைத்திருந்தாார் என தெரிவிக்கப்படுகின்றது.

தன்னையும் தன் குடும்பத்தையும் பாதுகாக்க, அந்த வீட்டு உரிமையாளர் தன்னிடம் சட்டப்பூர்வமாக இருந்த துப்பாக்கியால் கொள்ளையர்களை நோக்கிச் சுட்டார். இதில் ஒருவருக்கு காயம் ஏற்பட, மற்றவர்கள் தப்பியோடினர். காயமடைந்த நபர் பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

தன்னையும் தன் குடும்பத்தையும் பாதுகாத்த அந்த நபருக்கு எனது வாழ்த்துகள். அவர் துப்பாக்கியை முறையாகப் பராமரித்து, சட்டப்பூர்வமாக வைத்திருந்தார்.

அந்தத் திருடனைச் சுட்டது மகிழ்ச்சி அளிக்கிறது என போர்ட் ஊடகங்களிடம் தெரிவித்திருந்தார். இந்தக் கொள்ளையர்கள் உங்கள் குடும்பத்தை காயப்படுத்த முன்வருகிறார்கள். என் பார்வையில், இவர்களைச் சுட வேண்டும். மற்ற கொள்ளையர்களுக்கு இது ஒரு பாடமாக இருக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

வன்முறை குற்றவாளிகளுக்குப் பலமுறை பிணை வழங்கும் சில ‘பலவீனமான’ நீதிபதிகளால் தான் இதுபோன்ற குற்றங்கள் தொடர்கின்றன என தெரிவித்துள்ளார்.

சுடப்பட்ட நபர் 24 வயதான ட்ரெஸ்டின் காசனோவா-அல்மேன் (Trestin Cassanova-Alman) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.