Reading Time: < 1 minute

நாய் ஒன்று நான்கு பேரை கடித்த காரணத்தினால் அதன் உரிமையாளரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

Tamil Business Directory

டொரோண்டோ பொலுவார்ட் மேற்கு பகுதியில் நபர் ஒருவர் நாயுடன் வாகனமொன்றை கடத்திச் சென்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

வாகன உரிமையாளர் மீது நாயை தூண்டி கடிக்கச் செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவத்தில் காயமடைந்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் இடம்பெற்று இரண்டு மணித்தியால இடைவெளியில் சைக்கிளில் சென்ற ஆண் மற்றும் பெண் ஒருவரிடம் நாயுடன் வந்த நபர் ஒருவர் கொள்ளையிட்டுள்ளார்.

குறித்த நபர் நாயைத் தூண்டி விட்டதாகவும் நாயை குறித்த பெண்ணை கடித்து காயப்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

நாய் கடிக்கு உள்ளான பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதேவிதமாக மேலும் இரண்டு நபர்களிடம் கொள்ளையிட முயற்சித்துள்ளதாகவும் நாயைத் தூண்டி கடிக்கச் செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

100 பவுண்ட்கள் எடையுடைய பிட்புல் அல்லது மாஸ்டிப் ரக நாயே இவ்வாறு பலரை கடித்து காயப்படுத்தியுள்ளது.

இந்த சம்பவங்கள் தொடர்பில் தகவல்கள் தெரிந்தால் அறிவிக்குமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கோரியுள்ளனர்.