Reading Time: < 1 minute

கனடாவின் டொரொண்டோ நகரில், திங்கட்கிழமை இரவு, ரெக்ஸ்டேல் (Rexdale) பகுதியில் பொலிஸார் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவமொன்று பதிவாகியுள்ளது.

Tamil Business Directory

இந்த தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய இருவரை பொலிஸார் தேடி வருகின்றனர்.

ஜேம்ஸ்டவுன் கிரெசன்ட் Jamestown Crescent மற்றும் ஜோன் கார்லெனட் புல்வார்ட் John Garland Boulevard சந்திப்பு பகுதியில், மார்டின் க்ரோவ் Martin Grove மற்றும் அல்பியன் Albion வீதிகளுக்கு அருகிலுள்ள இடத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

துப்பாக்கிச் சத்தங்கள் கேட்பதாக பொது மக்களிடமிருந்து வந்த தகவலின் அடிப்படையில், இரவு 11 மணி அளவில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர்.

சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிஸாரை, இரு ஆண்கள் துப்பாக்கியால் சுட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தாக்குதலுக்குப் பிறகு, அவர்கள் அந்த இடத்திலிருந்து தப்பி ஓடியுள்ளனர். சந்தேக நபர்களின் விவரங்கள் அல்லது புகைப்படங்கள் இதுவரை பொலிஸாரினால் வெளியிடப்படவில்லை.

இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த தாக்குதல் சம்பவம் காரணமாக பொலிஸாருக்கு ஏதும் பாதிப்புக்கள் ஏற்பட்டனவா என்பது பற்றிய விபரங்கள் வெளியிடப்படவில்லை.