Reading Time: < 1 minute

டொராண்டோ ஸ்கார்பரோ பகுதியில் சனிக்கிழமை இரவு தெருவை கடக்கும் போது வாகனம் மோதி 65 வயது வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். டொராண்டோ பொலிஸார் இந்த விடயத்தைத் தெரிவித்துள்ளனர்.

Tamil Business Directory

இந்தச் சம்பவம் இரவு 10 மணியளவில் எக்லிங்டன் அவென்யூ ஈஸ்ட் மற்றும் டோரன்ஸ் சாலை அருகே இடம்பெற்றதாக கூறப்படுகிறது.

வயோதிபர் தெற்குப் பக்கம் இருந்து தெருவை கடக்க முயன்றபோது, எக்லிங்டன் அவென்யூவில் மைய வழியில் வாகனம் மோதி கவிழ்ந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலதிக விசாரணைகள்

உயிர்காப்பு பணியாளர்கள், உயிருக்கு ஆபத்தான நிலைமையுடன் இருந்த அவரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர்.

எனினும் சிகிச்சை பலனின்றி குறித்த வயோதிபர் உயிரிழந்தார் என தெரிவிக்கப்படுகின்றது.

இந்த விபத்தில் தொடர்புடைய வாகன ஓட்டுநர் 41 வயது ஆணாக இருப்பதாகவும், அவர் சம்பவ இடத்திலேயே இருந்ததாகவும் பொலிஸார் கூறினர்.

அவர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்படுமா என்பது இன்னும் தெளிவாகவில்லை. இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.