கனடாவின் முக்கிய நகரங்களில் ஒன்றான டொராண்டோவில் வீடுகளுக்கான வாடகை விலை தொடர்ந்து சரிவைச் சந்தித்து வருவதாக புதிய புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
Rentals.ca மற்றும் Urbanation அமைப்பு வெளியிட்டுள்ள அண்மையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. பெப்ரவரி மாதத்தில் டொராண்டோவின் சராசரி மாதாந்திர வாடகை 2,482 டொலராகக் குறைந்துள்ளது.
2025 ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் வாடகை விலை 5.3% குறைந்துள்ளது. 2024 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது 11.7% குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.
இரண்டு படுக்கையறை வீடுகளின் வாடகை 7.1% என அனைத்து பிரிவுகளிலும் சரிவு ஏற்பட்டுள்ளது.
சந்தையில் புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் பிரத்யேகமாக வாடகைக்கு விடப்படும் வீடுகளின் எண்ணிக்கை (Supply) அதிகரித்துள்ளதே இந்த விலை வீழ்ச்சிக்கு முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது.
“கோடை காலத்தில் பொதுவாக வாடகை உயரும் என்று எதிர்பார்ப்போம், ஆனால் கடந்த கோடையில் கூட டொராண்டோவில் விலை அதிகரிக்கவில்லை.
தற்போது சந்தையில் அதிகப்படியான வீடுகள் இருப்பதால், 2026 ஆம் ஆண்டு முழுவதும் விலை உயருவதற்கான வாய்ப்பு மிகக் குறைவு,” என்று Rentals.ca இன் ஜியாகோமோ லாடாஸ் தெரிவித்துள்ளார்.
வீடுகள் காலியாக இருப்பதைத் தவிர்க்க, உரிமையாளர்கள் தற்போது பல்வேறு சலுகைகளை வழங்கி வருகின்றனர்:
ஒரு சில மாதங்களுக்கு இலவச வாடகை அல்லது இலவச வாகன நிறுத்துமிடம் (Parking), ஏரோபிளான் (Aeroplan) போன்ற வெகுமதி புள்ளிகள், வாடகைதாரர்களின் வசதிக்கேற்ப குறைந்த பரப்பளவு கொண்ட (சராசரியாக 826 சதுர அடி) ஆனால் நவீன வசதிகள் கொண்ட வீடுகள் அதிகளவில் சந்தைக்கு வருகின்றன.
டொராண்டோ மட்டுமல்லாது அதன் அண்டை நகரங்களிலும் வாடகை குறைந்துள்ளது. ஓக்வில்லில் (Oakville) 4.1 சதவீதமும், பர்லிங்டனில் (Burlington) 4.5 சதவீதமும் வாடகை சரிந்துள்ளது.





Comments are closed, but trackbacks and pingbacks are open.